search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி"

    நெதர்லாந்தில் நடைபெற்று வந்த சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடரில் பெனால்டி ஷூட்டில் இந்தியா 1-3 எனத் தோல்வியை தழுவியது. #INDvAUS #INDvsAUS #HCT2018
    37-வது சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடர் நெதர்லாந்து நாட்டில் உள்ள பிரிடா நகரில் நடந்தது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.



    ஆட்டம் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்ததால் போட்டி சமநிலையில் முடிந்தது. இதனால் பெனால்டிஷூட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்தியா 1-3 என தோல்வியடைந்தது.
    நெதர்லாந்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் உலகக்கோப்பைக்கான பரிசோதனையான இருக்கும் என இந்திய அணி கேப்டன் தெரிவித்துள்ளார்.
    நெதர்லாந்தின் பிரேடாவில் நெதர்லாந்து, அர்ஜென்டினா, பாகிஸ்தான், பெல்ஜியம், நடப்பு சாம்பியன் மற்றும் இந்தியா பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் வருகிற 23-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரை நடக்கிறது.

    இந்த தொடர் இந்த வருடத்தின் இறுதியில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கு பரிசோதனையாக இருக்கும் என்று இந்திய அணி கேப்டன் ஸ்ரீஜேஷ் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஸ்ரீஜேஷ் கூறுகையில் ‘‘சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் தற்போதைய இலக்கு. மேலும், உலகக்கோப்பை தொடர் இந்த வருடம் இறுதியில் இந்தியாவில் நடைபெற இருக்கும் நிலையில், முன்னணி அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபில் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது பரிசோதனை செய்ய சிறந்த தொடராகும்’’ என்றார்.
    ×